"எங்களை மண்டியிட வைக்கிறது அமேசான்" - பியூச்சர் நிறுவனம் குற்றச்சாட்டு: நடந்தது என்ன?

"எங்களை மண்டியிட வைக்கிறது அமேசான்" - பியூச்சர் நிறுவனம் குற்றச்சாட்டு: நடந்தது என்ன?

"எங்களை மண்டியிட வைக்கிறது அமேசான்" - பியூச்சர் நிறுவனம் குற்றச்சாட்டு: நடந்தது என்ன?
Published on

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பியூச்சர் ரீடெய்ல் சொத்துகளை விற்பனை செய்வது தொடர்பாக அமேசான் மற்றும் பியூச்சர் நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த சிக்கல் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்த வண்ணம் உள்ளது. இதனை அந்நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இந்த வழக்கை இனி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக அமேசான் மற்றும் பியூச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் நிறுவனங்கள் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக அமேசான் குற்றம் சுமத்தியுள்ளது. அதோடு இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்படும் சொத்து விற்பனை சட்ட விளைவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சந்திக்க வழிவகுக்கும் என அமேசான் பகிரங்கமாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் எச்சரித்துள்ளது. 

>மூன்று நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்த சிக்கல் முடிவுக்கும் வரும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வழக்கு நடந்து வரும் நிலையில் தங்கள் ஸ்டோர்களை ரிலையன்ஸ் வசம் ஒப்படைக்க பியூச்சர் திட்டமிட்டுள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது. 

>ஆனால் பியூச்சர் நிறுவனம் அமேசான் தங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அமேசான் தங்களை மண்டியிட செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகவும். 15 நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கடைகள் கூட தங்கள் கையை விட்டு சென்றுள்ளதாகவும். தங்கள் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்றும் பியூச்சர் தெரிவித்துள்ளது. வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பியூச்சர் விளக்கம் கொடுத்துள்ளது. 

>ரிலையன்ஸ் நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி செயல்பட்டு வருவதாக அமேசான் தெரிவித்துள்ளது. 

>பிக் பஜார் உட்பட 1700-க்கும் அதிகமான அவுட்லெட்களை தங்கள் வசம் கொண்டுள்ள பியூச்சர் நிறுவனம் அதற்கான வாடகை குத்தகை கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.  

>இத்தகைய சூழலில் தான் ரிலையன்ஸ் குத்தகை செலுத்த முடியாத பியூச்சர் அவுட்லெட்களை கையகப்படுத்தி உள்ளது. அதோடு அங்கு பணியாற்றி வந்த சுமார் 30 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலையும் வழங்க முன்வந்துள்ளது. 

>கடந்த 2019-இல் அமேசான் நிறுவனம் பியூச்சர் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. அதற்கான ஒப்பந்தத்தை பியூச்சர் தற்போது மீறியுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. 

>கடந்த 2020-இல் பியூச்சர் நிறுவனம் தங்களது சில்லறை, மொத்த மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என அனைத்தையும் ரிலையன்ஸ் வசம் 24,713 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய விரும்பியது. 

>இந்நிலையில் தான் அமேசான் நிறுவனம் பியூச்சர் குழும ரீடெயில் சொத்துகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் விவகாரத்தில் மல்லுக்கட்டி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com