\
இன்ஃபோசிஸ்-ல் நந்தன் நிலகேனி? செய்தி கேட்டே உயர்ந்தது பங்குகள்!

இன்ஃபோசிஸ்-ல் நந்தன் நிலகேனி? செய்தி கேட்டே உயர்ந்தது பங்குகள்!

இன்ஃபோசிஸ்-ல் நந்தன் நிலகேனி? செய்தி கேட்டே உயர்ந்தது பங்குகள்!
Published on

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சிக்கல்களில் இருந்து மீட்க, நந்தன் நிலகேனி உயர் பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தை 1981ம் ஆண்டு தொடங்கிய 7 நிறுவனர்களில் ஒருவர், நந்தன் நிலகேனி. இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதன் பங்குகள் சரிவை சந்தித்தன. அதை மீட்க, நந்தன் நிலகேனியை இன்போசிஸ் மீண்டும் இழுத்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின், நான் எக்சிகியூடிவ் சேர்மன் பொறுப்பை அவர் சில நாட்களில் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது ஆதார் ஆணைய தலைவராக இருந்து வருகிறார் நிலகேனி. 

நிலகேனி, இன்ஃபோசிஸுக்கு திரும்பும் செய்திகள் வெளியானதுமே இன்ஃபோசிஸ் பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com