ஒவ்வொரு மணி நேரத்துக்கும்  ரூ.90கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி: பணக்கார பட்டியல் வெளியீடு

ஒவ்வொரு மணி நேரத்துக்கும்  ரூ.90கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி: பணக்கார பட்டியல் வெளியீடு
ஒவ்வொரு மணி நேரத்துக்கும்  ரூ.90கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி: பணக்கார பட்டியல் வெளியீடு

ஐஐஎஃப்எல் வெல்த் ஹூருன் இந்தியா பணக்கார பட்டியல் 2020 இன் படி, முகேஷ் அம்பானி பொதுமுடக்கத்திலிருந்து  ஒவ்வொரு  மணி நேரத்திற்கும்  90 கோடி ரூபாய்  சம்பாதித்தார் என்று தெரியவந்துள்ளது.

மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ்  பொதுமுடக்கம் ஆரம்பித்தததில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு  மணி நேரத்திற்கும்  90 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதனால் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்கார பட்டியல் 2020 இல் தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இவர் இடம்பெற்றுள்ளார்.

உலகின் முதல் 5 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள  ஒரே இந்தியரான முகேஷ்  அம்பானி, பேஸ்புக், கூகுள், சில்வர் லேக் போன்றவற்றிலிருந்து தொடர்ச்சியான  வருவாய் ஈட்டல் மற்றும்  முதலீடு  மூலமாக இவரின் சொத்துமதிப்பு 2,77,700 கோடி ரூபாய் அதிகரித்து தற்போது 6,58,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் மொத்த  சொத்துமதிப்பு என்பது , இப்போதைய இந்திய பணக்காரர்கள்  பட்டியலில் அவருக்கு அடுத்த இடங்களில் உள்ள  ஐந்து பேரின் ஒருங்கிணைந்த சொத்துமதிப்பை விடவும் பெரியது, இது அவரை ஆசியாவின்  முதல் பணக்காரராகவும், உலகின் நான்காவது பணக்காரராகவும் ஆக்குகிறது என்று  இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.எஃப்.எல் ஹுருன் இந்தியா பட்டியலில் ரூ .1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை கொண்ட பணக்கார நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இப்பட்டியலில் 828 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன, அதில் 627 பேர் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு தங்கள் செல்வத்தை அதிகரித்துள்ளனர், 162 பேர் புதிதாக பட்டியலில் நுழைந்தவர்கள். பட்டியலில் உள்ள முதல் 100 நபர்கள் பட்டியலில் கிட்டத்தட்ட 64 சதவீத சொத்தினை கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com