வணிகம்
உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை
உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை
உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், மருத்துவத் துறைக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டார். உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மருத்துவ சேவையை பரவலாக்க கூடுதலாக மருத்துவ இடங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்றும் அருண்ஜேட்லி கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

