\
கார்களின் விலையை உயர்த்தப்போகிறோம்: மாருதி சுசுகி அறிவிப்பு

கார்களின் விலையை உயர்த்தப்போகிறோம்: மாருதி சுசுகி அறிவிப்பு

கார்களின் விலையை உயர்த்தப்போகிறோம்: மாருதி சுசுகி அறிவிப்பு
Published on

கார்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்‌கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து டொயோட்டா, மஹிந்தரா அண்டு மஹிந்தரா, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதேபோன்று விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம், ஜனவரி மாதத்தில் வாகனங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பிஎஸ்6 தரத்தில் சந்தையில் வாகனங்களை அறிமுகப்படுத்தும்போது விலை உயர்வு இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com