கார்களின் விலையை மீண்டும் உயர்த்துகிறது மாருதி சுஸுகி நிறுவனம்!

கார்களின் விலையை மீண்டும் உயர்த்துகிறது மாருதி சுஸுகி நிறுவனம்!

கார்களின் விலையை மீண்டும் உயர்த்துகிறது மாருதி சுஸுகி நிறுவனம்!
Published on

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தனது பல்வேறு கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக விலை ஏற்ற நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது மாருதி சுஸுகி. கடந்த ஜனவரியில் கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கார் உற்பத்திக்கான செலவுகள் கூடி இருப்பதால் இந்த விலை ஏற்றத்தை செய்ய வேண்டி உள்ளதாக மாருதி நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி ஆட்டோ தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலில் இழப்பை எதிர்கொண்டன. அதேநேரத்தில் உற்பத்திக்கான செலவும் உயர்ந்துள்ளது. 

அதனை ஈடுகட்டவே மஹிந்திரா, டாடா மற்றும் மாருதி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தி உள்ளதாக சொல்கின்றனர் துறை சார்ந்த வல்லுனர்கள். மாருதி நிறுவனம் தற்போது அறிவித்துள்ள விலை ஏற்றம் எவ்வளவு என்பதை தெரிவிக்காமல் உள்ளது. கடந்த ஜனவரியில் மாருதி நிறுவனத்தின் சில மாடல்கள் 34,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com