கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியப் பங்குச்சந்தை... காரணம் என்ன?

கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியப் பங்குச்சந்தை... காரணம் என்ன?
கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியப் பங்குச்சந்தை... காரணம் என்ன?

இந்திய பங்குச்சந்தை இன்றைய தினம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்செக்ஸ் 1,747 புள்ளிகள் சரிந்து 56,405 புள்ளிகளில் நிறைவுபெற்றுள்ளது. இதனால் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 531 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 16,842 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என ரஷ்யா கூறியிருந்தது. இதனால் ரஷ்யா, எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என கூறப்பட்டு வந்தது. 

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கருத்து தெரிவித்து அணிவகுத்து வருகின்றன. இப்படியான சூழலில், தற்போது இந்திய பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com