இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத கொந்தளிப்பைச் சந்தித்து வருகிறது. அதில் கடந்த திங்கள் கிழமை (ஆகஸ்ட் 5) அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, நடந்துகொண்டிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைத் தொடர்ந்து டாக்காவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதையடுத்து வங்கதேச இராணுவத் தளபதி இப்போது ஒரு இடைக்கால அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கும் என்று அறிவித்தார்.
வங்கதேசம், இந்தியாவின் 25வது பெரிய வர்த்தக கூட்டாளியாகும், இருதரப்பு வர்த்தகத்தின் அளவு $12.9 பில்லியன் ஆகும்.
FMCG தவிர, இந்திய வாகன ஏற்றுமதிக்கான முக்கிய இடமாகவும் வங்கதேசம் உள்ளது. பல இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தில் வணிக நலன்களைக் கொண்டுள்ளன மற்றும் தற்போதைய நெருக்கடி இந்த நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், இந்தியாவைச் சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நெருக்கடியினால் பயனடையலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த நெருக்கடியினால் பெரிதும் பாதிக்க இருப்பது எஃப்எம்சிஜி (Fast-moving consumer goods எனப்படும் FMCG) நிறுவனங்கள்தான். Marico நிறுவனத்தின் 11% வருமானம் வங்கதேசத்தில் இருந்து வருகிறது. இது அந்நிறுவனத்தின் உலகளாவிய வருமானத்தில் 44% ஆகும்.
இமாமி, டாபர், பிரிட்டானியா மற்றும் ஜிசிபிஎல் உள்ளிட்ட பிற எஃப்எம்சிஜி நிறுவனங்களும் வங்கதேசம் சந்தையில் இருந்து குறிப்பிடத்தக்க வருமானத்தை கொண்டுள்ளன. இருப்பினும், Maricoவைப் போலல்லாமல், அவர்கள் அந்நாட்டிலிருந்து தங்கள் மொத்த வருவாயில் 5% வரை மட்டுமே பெறுகிறார்கள்.
Jubilant Foodworks லிமிடெட் சமீபத்தில் வங்கதேசத்தில் டோமினோஸ் பீட்சாவை 100% கையகப்படுத்துதலை முடித்துள்ளது மற்றும் கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் நாட்டில் 26 கடைகளை இயக்கி, Popeyes ஃபிரைடு சிக்கன் ரெஸ்டாரன்ட் சங்கிலிக்கான உரிமையைப் பெற்றுள்ளது.
Asian Paints, Kansai Nerolac, Pidilite & Godrej Consumer Products ஆகியவை தங்கள் துணை நிறுவனங்களை வங்கதேசம் சந்தையில் வைத்து உள்ளன. விஐபி இண்டஸ்ட்ரீஸ் அதன் உற்பத்தித் திறனில் 30-35% வங்கதேசத்திலிருந்து பெறுகிறது, இது அந்நாட்டை நம்பியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
ரயில்வே துறையில், ரைட்ஸ் லிமிடெட் வங்கதேசத்திற்கு 200 அகலப்பாதை பயணிகள் பெட்டிகளை வழங்குவதற்காக ரூ.906 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. Texmaco Rail & Engineering Ltd. அந்நாட்டிற்கு சரக்கு பெட்டிகளை ஏற்றுமதி செய்கிறது, அதே நேரத்தில் BEML லிமிடெட் வங்கதேச ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது.
கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் போன்ற பாதுகாப்பு நிறுவனங்கள் வங்கதேசம் கடற்படைக்கு மேம்பட்ட கடல்வழி இழுவைகளை உருவாக்க $21-மில்லியன் ஆர்டரையும், வங்கதேசம் உள்நாட்டு நீர் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து மொத்தம் $16.5 மில்லியன் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளன.
NHPC லிமிடெட் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய பவர் கம்பெனிகள் வங்கதேசத்தில் ராம்பால் மின் நிலையம் எனப்படும் கூட்டு முயற்சியின் மூலம் 1,320 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குகின்றன.
Hero MotoCorp, நிலாய் மோட்டார்ஸ் லிமிடெட் உடன் இணைந்து, வங்கதேசத்தின் ஜெஸ்ஸூரில் குறிப்பிடத்தக்க உற்பத்தி அலகு ஒன்றை நிறுவியுள்ளது. ஜெஸ்ஸோர் ஆலை ஆண்டுக்கு 1.2 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 2023-24 இல், இந்த முயற்சியானது Hero MotoCorp இன் மொத்த விற்பனையில் 2-3% ஆக இருந்தது மற்றும் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் கணிசமான 50-60% ஆகும்.
அசோக் லேலண்ட் லிமிடெட் வங்கதேசத்தில் ஐஎஃப்ஏடி ஆட்டோஸ் டாக்காவுடன் இணைந்து ஒரு அசெம்பிளி ஆலையைக் கொண்டுள்ளது. இந்த பணிமனை நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மதன்பூரில் அமைந்துள்ளது. இது உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட இலகுரக மற்றும் நடுத்தர வணிக டிரக்குகள் மற்றும் பேருந்துகளில் 65% விற்பனை செய்கிறது.
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களும் இலகுரக வர்த்தக வாகனத்தை பங்குதாரர்கள் மூலம் சந்தைகளில் விற்பனை செய்கின்றன. டிப்பர் லாரி சந்தையில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட டிப்பர்களுக்கு சந்தைகளில் வலுவான தேவை உள்ளது. மற்றொரு முக்கிய பிரிவு டாடா மோட்டார்ஸ் இலக்காகக் கொண்ட பேருந்து சந்தை. ஜெஸ்ஸூரில் உள்ள டாடா மோட்டார்ஸின் உற்பத்தி ஆலை, நாட்டின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பாக வடிவமைக்கப்பட்ட பேருந்துகளை உற்பத்தி செய்கிறது.
Apollo Hospitals, Max Healthcare, Medanta, Narayana Hrudayalaya & Fortis healthcare போன்ற மருத்துவமனைகள் Medical Tourism மூலம் கணிசமான வருமானம் ஈட்டுகின்றன. வங்கதேசம் குறித்து இந்நிறுவனங்கள் எதுவும் குறிப்பிடவில்லை எனினும், நிறுவனங்களில் சர்வதேச நோயாளிகள் மூலம் வரும் வருமானத்தில் 3-7% இதனால் பாதிக்கப்படலாம் என brokerages நிறுவனங்கள் கணிக்கின்றன.
வங்கதேசத்தின் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் ஏற்றுமதியில் பெரும்பங்களிப்பை வழங்கும் ஜவுளித் துறை, இந்த கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ஜவுளி வாங்குபவர்கள் இந்தியா போன்ற மாற்று சந்தைகளுக்கு தங்கள் கவனத்தை மாற்றுகிறார்கள்.
கேபிஆர் மில், அரவிந்த், கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெல்ஸ்பன் லிவிங் உள்ளிட்ட இந்திய உற்பத்தியாளர்களின் பங்குகள் அனைத்தும் மும்பையில் அதிக சந்தைப் பங்கை எதிர்பார்க்கும் வகையில் 10%க்கும் அதிகமாக உயர்ந்தன. ஹாங்காங் மற்றும் தாய்லாந்துடன் டாடா குழும “Trent” நிறுவனத்திற்கு மூலப்பொருட்கள் வழங்கும் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் உள்ளது.