இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! பங்குச்சந்தை, தங்கம் விலை நிலவரம் இதுதான்!
இன்றைய பங்கு சந்தையின் ஆரம்ப நிலவரம் மற்றும் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம்.
பங்கு சந்தை:
இன்றைய தேசிய பங்குசந்தையில் நிஃப்டி 24,652 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கி 35 புள்ளிகள் அதிகரித்து 24,652 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 81,575 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 130 புள்ளிகள் அதிகரித்த நிலையில் 81,642 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியானது சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஏற்றத்துடன் பங்கு சந்தை வர்த்தகமாகி வருபவதற்கு முக்கிய காரணமாக இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எல்&டி பங்கு விலைகள் உயர்வை சந்தித்து வருவது காரணம். அதே போல் ஸ்விக்கி நிறுவனத்தின் பங்குகளும் அதிகரித்துள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு
இருப்பினும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது புதிய வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 13 காசுகள் சரிந்து ரூ.84.86 ஆக இருக்கிறது.
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலையும் சற்றே ஏற்றத்துடன் காணப்படுகிறது. 22 கிராம் கேரட் தங்கத்தின் விலையானது ரூ.75 அதிகரித்து கிராமிற்கு ரூ.7205 ரூபாய்கு விற்கப்படுகிறது அதே போல் ஒரு சவரன் தங்கமானது 600 அதிகரித்து ரூ.57640க்கு விற்பனையாகிறது.