சர்வதேச பதற்றம்.. சரிந்த பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்த இந்திய பங்கு சந்தை!

சர்வதேச பதற்றம்.. சரிந்த பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்த இந்திய பங்கு சந்தை!
சரிவில் பங்கு சந்தை
சரிவில் பங்கு சந்தைPT

இந்திய பங்கு சந்தை

கடந்த சில வாரங்களாக பங்குசந்தையானது ஏற்றத்தை சந்தித்து நிப்டி 22775 தாண்டியும் சென்செக்ஸ் 75000 தாண்டியும் வர்த்தகமாகிக் கொண்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் பங்கு சந்தை சரிவை கண்டுள்ளது. இன்றைய சரிவானது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வர்த்தகம் ஏற்றத்தை சந்தித்து வந்தது இதற்கு காரணம் இந்தியா இன்க் தனது காலாண்டு நிதிநிலைகளை வெளியிடுவதாலும் வரும் நாட்களில் சில ஒருங்கிணைப்பு இருக்கும் என்று ஆய்வாளார்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்ததாக வாரத்தின் பிற்பகுதியில் மக்களவை தேர்தல் நடைப்பெற இருப்பதை ஒட்டி பங்குசந்தைகளில் சில மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்றைய சரிவானது முதலீட்டாளார்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சரிவில் பங்கு சந்தை
”மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து சீட்டில் பிரச்னை” - ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அதிர்ச்சி சர்வே!

இன்றைய இந்திய வர்த்தக ஆரம்பம்

வர்த்தகதினமான இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 929 புள்ளிகள் சரிந்து 73315 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தையான நிப்டி 216 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 22302 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது.

இந்திய வர்த்தக முடிவில்

இன்றைய பங்கு சந்தையின் முடிவில் சென்செக்ஸ் 73,399 புள்ளிகளாகவும், நிப்டி 22272 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்து சந்தைகளிலும், நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் கொண்டு 3 சதவீதம் வரை சரிந்தன. பலமுன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிந்தே காணப்பட்டது.

இன்றைய இறக்கத்திற்கு முக்கிய காரணம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே பதற்றம் காணப்படும் நிலையில், தற்பொழுது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் ராணுவத்தை இலக்காகக் கொண்டு ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவியது. முன்னேற்பாடாக இஸ்ரேல் இருந்ததால் இஸ்ரேலுக்கு அதிக பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் போர் பதற்றம் காரணமாக, இன்று ஆசிய பங்கு சந்தைகள் சரிவுடனே வர்த்தகமானநிலையில், அதன் எதிரொலி இந்திய பங்கு சந்தைகளிலும் காணப்பட்டது. இது தவிர அமெரிக்காவில் எதிர்பார்த்ததைவிட பணவீக்க விகிதம் உயர்வானதும் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில், பேங்க் நிஃப்டி, நிஃப்டி , எஃப்எம்சிஜி, நிஃப்டி ரியாலிட்டி குறியீடுகள் வர்த்தகத்தகம் ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரத்திலேயே தலா ஒரு சதவீதத்திற்கு மேல் சரிந்ததால், முன்னணி துறைகளின் பங்குகளும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. இதனால்அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சிவப்புக் குறியீட்டையே காட்டியது.

மாறாக, ஐடி பெஹிமோத், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தன. ஏனெனில் இந்நிறுவனங்கள் தங்களின் காலாண்டு லாபம் 3.5% பதிவு செய்திருந்ததால், முதலீட்டாளார்களின் கவனம் இந்நிறுவனங்களின் மீது திரும்பியிருந்தது.

ஆசியா-பசிபிக் சந்தைகளும் சரிவில்..

வார இறுதியில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலின் தாக்கத்தை இந்திய சந்தை மட்டுமின்றி ஆசியா-பசிபிக் பங்குசந்தை முதலீட்டாளர்களும் சந்தித்தனர். ஆசிய-பசிபிக் சந்தைகள் இன்று காலை வீழ்ச்சியில் தொடங்கியது.

ஜப்பானின் Nikkei 225- 1 சதவீதம் சரிந்தது, ஆஸ்திரேலியாவின் S&P 200 இன்டெக்ஸ் 0.6 சதவீதம் சரிந்தது, தென் கொரியாவின் கோஸ்பி 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது.

கமாடிட்டி முன்னணியில், எண்ணெய் விலையில் சிறிது மாற்றம் இல்லை, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு $90க்கு மேல் மற்றும் WTI கச்சா எண்ணெய் பேரலுக்கு $85க்கு மேல் இருந்தது.

பங்குச் சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com