வணிகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
வணிகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புPt Web

2025 Recap | வணிகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.!

2025ஆம் ஆண்டின் வணிகம் சார்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை சுருக்கமாக காணலாம்.
Summary

2025 ஆம் ஆண்டு அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் உலக நிகழ்வுகள் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் பாதித்த முக்கிய தருணங்களை பதிவு செய்த ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.

1. 5 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பு

என்விடியா
என்விடியாx

ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (NVIDIA) சந்தை மதிப்பு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. உலகில் எந்த நிறுவனம் எட்டியிராத 5 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை தாண்டியது அமெரிக்க நிறுவனமான என்விடியா (NVIDIA). இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விடவும் அதிகம். உலக நாடுகள் ஏஐ நோக்கி மிக வேகமாக மாறி வரும் நிலையில், என்விடியாவின் சிப்புகளுக்கான தேவை மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

2. ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜிடிபி வளர்ச்சி.!

ஜிடிபி வளர்ச்சி
ஜிடிபி வளர்ச்சிx

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தபோதும், இந்தியா ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் 8.2 சதவீத ஜிடிபி வளர்ச்சியை பதிவு செய்தது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் இலக்கிற்கு, இந்தத் தொடர் வளர்ச்சி பாதை அமைத்தது. அதேபோல், இந்திய அளவில் தமிழ்நாடு 16 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து முதலாவதாக வந்து கவனம் ஈர்த்தது.

3. ஹெச் 1 பி விசா விவகாரம்

 ஹெச் 1 பி விசா
ஹெச் 1 பி விசாpt web

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய, எச் 1 பி விசா கட்டணத்தை அதிரடியாக 1 லட்சம் டாலராக ட்ரம்ப் உயர்த்தினார். அமெரிக்காவுக்கு ஹெச் 1 பி விசாவில் இந்தியர்கள் அதிகம் வேலை பெற்றுவந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

4. 20 பில்லியன் டாலருக்கு மேல் ஐபிஓ மூலம் நிதி திரட்டிய நிறுவனங்கள்.!

பங்குச் சந்தை
பங்குச் சந்தைfile image

இந்திய பங்குச் சந்தையில் பொதுப் பங்கு வெளியீடு புதிய உச்சம் கண்டது. 20 பில்லியன் டாலருக்கு மேல் நிறுவனங்கள் ஐபிஓ மூலம் நிதி திரட்டின. எஸ்எம்இ உட்பட 350க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2025-ல் ஐபிஓ வெளியிட்டன. புதிய தொழில்நுட்ப, சேவை துறையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வருகை இந்திய பங்குச் சந்தை போக்கில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

5. இந்தியாவில் 6 லட்சம் கோடி முதலீடு செய்த பெரு நிறுவனங்கள்.!

AI technology
ஏஐஎக்ஸ் தளம்

இந்தியாவின் ஏஐ துறையில் முக்கியமான ஆண்டு இது. கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்தியாவில் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்தன. இது இந்தியாவில் ஏஐ பாய்ச்சலுக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.

6. இந்திய  ரூபாயின் மதிப்பு சரிவு.!

அமெரிக்க டாலர், இந்திய ரூபாய்
அமெரிக்க டாலர், இந்திய ரூபாய்pt web

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதால், ரூபாய் மதிப்பு 91 ஆக வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், மின்னணு பொருட்கள் உட்பட இந்தியா இறக்குமதி பொருட்களின் விலைவாசி உயரும் அபாயம் உருவானது.

7. ஜிஎஸ்டி 2.0: ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டிபுதிய தலைமுறை

ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு மிக முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டது. பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த இரு அடுக்கு வரிமுறை இறுதியாக அமலுக்கு வந்தது. சிக்கலான நான்கு அடுக்குகளுக்குப் பதிலாக, 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என வரி விகிதங்கள் சுருக்கப்பட்டன. இதனால் கார், டிவி, மொபைல் போன்ற மின்னணு சாதனங்களின் விலை கணிசமாகக் குறைந்தது. மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினரின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு முழு வரி விலக்கு அளித்தது.

8. இண்டிகோ விமான சேவை பாதிப்பு.!

இண்டிகோ விமானங்கள்
இண்டிகோ விமானங்கள்web

இந்திய விமான போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது இண்டிகோ. தினமும் ஆயிரக்கணக்கான விமான ரத்துகளால், விமான நிலையங்களில் பெரும் குழப்பம் வெடித்தது. பயணிகள் கொந்தளித்தனர். விமான பணியாளர்கள் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளே இந்த களேபரங்களுக்கு காரணமானது. ஒற்றை நிறுவன ஆதிக்கத்தின் பின் உள்ள ஆபத்துகளையும் இச்சம்பவம் வெளிச்சத்துக்கொண்டுவந்தது.

9. இந்தியா மீதான வரி விதிப்பு.!

us and india tariff issue tariff vs tax difference
modi, trumpmeta ai, x page

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரி விகிதங்களை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தார். அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகள் மீது பதில் வரி விதிப்பதாக கூறிய ட்ரம்ப், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்திய பொருட்களை அதிகம் வாங்கும் நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பு, இந்திய ஏற்றுமதி துறைக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

10. 1 லட்சம் ரூபாயை கடந்த தங்கம் விலை.!

தங்கம்
தங்கம்கோப்புப்படம்

சர்வதேச அரசியல், பொருளாதாரப் பதற்றங்களால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை தாண்டியது. தங்கத்துக்குப் போட்டியாக, வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது. 1 கிலோ வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டியது. இவ்வாண்டு மட்டும் தங்கம் 75 சதவீதமும் வெள்ளி 130 சதவீதமும் ஏற்றம் கண்டு அதிரச் செய்தன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com