அடுத்த 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் 200,000-ஐ தொடும்: ராம்தேவ் அகர்வால் கணிப்பு

அடுத்த 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் 200,000-ஐ தொடும்: ராம்தேவ் அகர்வால் கணிப்பு
அடுத்த 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் 200,000-ஐ தொடும்: ராம்தேவ் அகர்வால் கணிப்பு

'அடுத்த பத்து ஆண்டுகளில் சென்செக்ஸ் 2 லட்சம் புள்ளிகளைத் தொடும்' எனக்கூறியுள்ளார் ராம்தேவ் அகர்வால்.

கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. தற்போது புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வரும் சூழலில் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேசமயம் பதற்றமும் அவர்களிடத்தில் இருக்கிறது. உச்சத்தில் இருக்கும் சந்தை சரியும் வாய்ப்பு இருக்குமா என்றும் யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பங்குச்சந்தையில் நீண்ட அனுபவம் மிக்கவரான மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராம்தேவ் அகர்வால் கூறிய வார்த்தைகள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

'அடுத்த பத்து ஆண்டுகளில் சென்செக்ஸ் 2 லட்சம் புள்ளிகளைத் தொடும்' என ராம்தேவ் தெரிவித்திருக்கிறார். தற்போது சென்செக்ஸ் 51,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அளவுக்கு சென்செக்ஸ் உயரும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல நிறுவனங்களின் வருமானம் அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15 சதவீத அளவுக்கு வருமான வளர்ச்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் சென்செக்ஸ் ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் 19,445 புள்ளிகளில் இருந்தது. மார்ச் 2021-ம் ஆண்டு 49,509 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சி இருந்ததாலும் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் பல சிக்கல்கள் இருந்தது. பணமதிப்பு நீக்கம், ஐஎல்எப்எஸ் நெருக்கடி மற்றும் கோவிட் உள்ளிட்ட சிக்கல்களை கடந்தது இந்திய பொருளதாரம்.

2010-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.1.7 லட்சம் கோடியாக இருந்தது. 2020-ம் ஆண்டு 2.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 2029-ம் ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாயாக இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு இருக்கும் என்றும் ராம்தேவ் கணித்திருக்கிறார்.

டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவன பங்குகளில் எதிர்காலம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பு: இது கணிப்பு மட்டுமே. இதனை முதலீட்டுக்கான பரிந்துரையாக எடுத்துக்கொள்ள கூடாது. சொந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com