பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வுடன் இவ்வாரத்தின் வர்த்தகத்தைத் தொடக்கியுள்ளன.
வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண், சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. சற்றுமுன் சென்செக்ஸ்187 புள்ளிகள் உயர்வுடன் 29 ஆயிரத்து 19 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிஃப்டி 53 புள்ளிகள் அதிகரித்து 8 ஆயிரத்து 91 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதன் அமலாக்கத்தில் உள்ள தடைகள் அகன்றதன் எதிரொலியாக, பங்குச் சந்தைகள் உயர்ந்ததாகப் பங்கு வணிக நிபுணர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, பங்கு சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் ஆரம்பித்துள்ளன..அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.68.74 ஆக இருந்தது.