`ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கும் பொருட்களில் போலிகள் தான் அதிகம்' - அதிர்ச்சி ரிப்போர்ட்!

`ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கும் பொருட்களில் போலிகள் தான் அதிகம்' - அதிர்ச்சி ரிப்போர்ட்!
`ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கும் பொருட்களில் போலிகள் தான் அதிகம்' - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் மும்பை வாழ் மக்கள் வாங்கும் பொருட்களில் போலிகள் அதிகம் இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலான மும்பை வாழ் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களை ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்குகின்றனர். இவற்றில் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுச் சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 8 மாதங்களில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி பொருட்களை பறிமுதல் செய்ததோடு 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே அன்றாட தேவைக்கான பொருட்களை அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கும் நிலையில், அவை தரமானவைதானா என உறுதி செய்துகொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com