ஆர்வம் காட்டாத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - தள்ளுபடி விலையில் பட்டியலாகிறதா எல்.ஐ.சி.?

ஆர்வம் காட்டாத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - தள்ளுபடி விலையில் பட்டியலாகிறதா எல்.ஐ.சி.?
ஆர்வம் காட்டாத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - தள்ளுபடி விலையில் பட்டியலாகிறதா எல்.ஐ.சி.?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. வரும் 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலாகிறது. ஒட்டுமொத்தமாக மூன்று மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்திருந்தாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. சிறு முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காண்பித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தை விட குறைவாக அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

இதனால் பட்டியலாகும்போது தள்ளுபடி விலையில் பட்டியலாகும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வெளிச்சந்தையில் எல்.ஐ.சி. பங்கு விலை ஐபிஓ விலையை விட தொடர்ந்து குறைவாகவே வர்த்தகமாகிறது. ஒர் பங்கின் விலையாக ரூ.902 முதல் 949 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஐபிஓவுக்கு முன்பாக ஒரு பங்கின் விலை வெளிச்சந்தையில் 90 ரூபாய்க்கு மேல் உயர்வாக வர்த்தகமானது. ஆனால் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்ததன் காரணமாக பட்டியல் விலையில் இருந்து 10 ரூபாய் அளவுக்கு குறைந்தே வர்த்தகமாகிறது.

இதனால் பட்டியலாகும் போது குறைந்த விலையிலோ அல்லது பெரிய ஏற்றம் இல்லாமலோ வர்த்தகமாகும். மே 12-ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்படும். 17-ம் தேதி பட்டியல் செய்யப்படும். 3.5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்கிறது. இதன் மூலம் ரூ.20500 கோடி அளவுக்கு மத்திய அரசு திரட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com