விண்ணப்பித்த 22 நாட்களில் எல்.ஐ.சி. ஐபிஓ செயல்பட செபி அனுமதி

விண்ணப்பித்த 22 நாட்களில் எல்.ஐ.சி. ஐபிஓ செயல்பட செபி அனுமதி
விண்ணப்பித்த 22 நாட்களில் எல்.ஐ.சி. ஐபிஓ செயல்பட செபி அனுமதி

முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வமாக இருக்கும் எல்.ஐ.சி.யின் ஐபிஓவுக்கு செபி அனுமதி அளித்திருக்கிறது. எல்.ஐ.சி விண்ணப்பித்த 22 நாட்களில் செபி அனுமதி வழங்கி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அன்று எல்.ஐ.சி. இதற்கு விண்ணப்பித்திருந்தது. 100 சதவீத மத்திய அரசு நிறுவனமான இதிலிருந்து, 5 சதவீத பங்குகளை அரசு விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.63,000 கோடி அளவுக்கு மத்திய அரசு திரட்ட திட்டமிட்டிருக்கிறது. 31.62 கோடி பங்குகளை எல்.ஐ.சி. விற்க இருக்கிறது. இதில் சிறு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதம் ஒதுக்கிடு செய்ய இருக்கிறது. தவிர பணியாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கும் தள்ளுபடி விலையில் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.

ஐபிஓவுக்கான அனுமதியை செபி வழங்கிவிட்டாலும் தற்போதைய போர் சூழல் காரணமாக அடுத்த நிதிஆண்டுக்கு ஐபிஓ தள்ளிப்போகும் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. செபியின் அனுமதி கிடைத்து 12 மாதங்கள் வரை ஐபிஓ வெளியிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது. பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. அதில் இருந்து இதுவரை பங்குச்சந்தைகள் சுமார் 6 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளன. இந்த காலத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 30000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள்.

எல்.ஐ.சி. ஐபிஒ வெளியாகும்பட்சத்தில் மிகப்பெரிய ஐபிஓவாக இது இருக்கும். தற்போது வரை பேடிஎம் திரட்டிய ரூ.18300 கோடிதான் இந்தியாவில் பெரிய ஐபிஓ ஆகும். எல்.ஐ.சி. பட்டியலான பிறகு சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக எல்.ஐ.சி. மாறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com