2010-11-ல் 10.26%, 2019-20-ல் 4.18%... 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் பாதை!

2010-11-ல் 10.26%, 2019-20-ல் 4.18%... 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் பாதை!

2010-11-ல் 10.26%, 2019-20-ல் 4.18%... 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் பாதை!
Published on

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பாதை எப்படி இருந்து வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Gross Domestic Product சுருக்கமாக GDP - இதுதான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார பலத்தை காட்டும் கண்ணாடியாக இருந்து வருகிறது. நாட்டின் தொழிற்சாலைகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்த பொருட்களின் மதிப்பு மற்றும் நாடெங்கும் பல்வேறு துறைகளில் வழங்கப்பட்ட சேவைகளின் மதிப்பை சேர்த்தால் கிடைப்பதே GDP என அழைக்கப்படுகிறது.

கடந்த 10 நிதியாண்டுகளுக்கு முன் நாட்டின் பொருளாதாரம் 10.26% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியுடன் திகழ்ந்தது. ஆனால் அவ்வளர்ச்சி அடுத்த இரு ஆண்டுகளில் 6.63% ஆகவும் 5.45% ஆகவும் குறைந்தது. எனினும் அடுத்த 5 நிதியாண்டுகளில் பொருளாதாரம் ஏற்றப்பாதைக்கு திரும்பியது. 2013-14 இல் 6.38% ஆக இருந்த வளர்ச்சி 2014-15இல் 7.41% ஆகவும் 2015-16இல் 7.99% ஆகவும் உயர்ந்தது. 2016-17இல் வளர்ச்சி 8.25% ஆக இருந்தது. ஆனால் இதன் பின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் சரிவுப்பாதைக்கு திரும்பியது. 2017-18இல் 7.04% ஆக இருந்த வளர்ச்சி2018-19-இல் 6.12% ஆகவும் 2019-20இல் 4.18% ஆகவும் சரிவுப்பாதையில் பயணித்தது.

கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா இந்திய பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மைனஸ் 23.9%என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை பொருளாதாரம் சந்தித்தது. எனிவும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2ஆவது காலாண்டில் இது மைனஸ் 7.5% ஆக சற்றே மீண்டது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் நேர்மறை பாதைக்கு திரும்பி வளர்ச்சி 0.01% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 2020-21 ஒட்டுமொத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7% ஆக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில், IMF எனப்படும் சர்வதேச நிதியம் உற்சாகம் தரும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் இந்தியா 11.5% வளர்ச்சியை காணும் என்றும் இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் இரட்டை இலக்க வளர்ச்சியை தொட வாய்ப்பில்லை என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த கணிப்பு உண்மையாகும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என நம்பலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com