ஆர்டர் செய்தது கம்யூனிஸ்ட் புத்தகம்; வந்தது பகவத்கீதை: அமேசான் குளறுபடி!!

ஆர்டர் செய்தது கம்யூனிஸ்ட் புத்தகம்; வந்தது பகவத்கீதை: அமேசான் குளறுபடி!!

ஆர்டர் செய்தது கம்யூனிஸ்ட் புத்தகம்; வந்தது பகவத்கீதை: அமேசான் குளறுபடி!!
Published on

கம்யூனிஸ்ட் தொடர்பான புத்தகத்தை ஆர்டர் செய்த நபருக்கு பகவத்கீதை புத்தகத்தை அமேசான் மாற்றி அனுப்பியுள்ளது

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இணையதளம் வழியாக வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. நம்ப முடியாத ஆஃபர்களும் ஆன்லைன் ஷாப்பிங் மோகத்திற்கு முக்கிய காரணம். ஆனால் அவ்வப்போது ஆன்லைன் ஷாப்பிங் சில சிக்கல்களையும் உண்டாக்கிவிடுகிறது. நுகர்வோர் கேட்பது ஒன்று ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அனுப்புவது வேறொன்று என சிக்கல்கள் உண்டாகும்.

இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த சுதிர்த்தோ தாஸ் என்ற நபர் கம்யூனிஸ்ட் அறிக்கைகள் என்ற ஒரு புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு பார்சல் வந்துவிட்டதாக அமேசான் டெலிவரி செய்பவர் அழைத்துள்ளார். ஆனால் ஆர்டர் செய்தவர் அலுவலகத்தில் இருந்ததால் வேறு ஒருவரை வாங்கச்சொல்லி உள்ளார். பார்சலை வாங்கிய நபர் புத்தகம் மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார். வீட்டிற்குச் சென்று சுதிர்த்தோ தாஸ் பார்த்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்த கம்யூனிஸ்ட் அறிக்கைகள் புத்தகத்திற்கு பதிலாக பகவத்கீதை புத்தகம் இருந்துள்ளது. இது குறித்து சுதிர்த்தோ தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ரூ.300 மதிப்புள்ள ஸ்கின் லோஷனை ஆர்டர் செய்த நபருக்கு ரூ.19ஆயிரம் மதிப்புள்ள ஹெட் போனை அமேசான் மாற்றி அனுப்பி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com