\
ஸ்ரீராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 9.9% பங்குகளை வாங்கும் கேகேஆர்

ஸ்ரீராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 9.9% பங்குகளை வாங்கும் கேகேஆர்

ஸ்ரீராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 9.9% பங்குகளை வாங்கும் கேகேஆர்
Published on

பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான கேகேஆர் நிறுவனம் ஸ்ரீராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது. இந்த பங்குகளின் மதிப்பு ரூ.1800 கோடியாகும். இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.18000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் உள்ள பெரிய முதலீட்டாளரான கேகேஆர், ஸ்ரீராம் குழுமத்தில் முதலீடு செய்திருக்கிறது. எங்களுடைய புதிய முதலீட்டாளரை வரவேற்கிறோம் என ஸ்ரீராம் குழுமம் தெரிவித்திருக்கிறது. இந்த ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.



இந்தியாவில் காப்பீட்டு துறை வேகமாக வளர்ந்துவருகிறது. அதில் ஸ்ரீராம் குழுமம் முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஸ்ரீராம் குழுமத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம் என கேகேஆர் தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com