இந்தியாவின்  வேலையின்மை  விகிதம்  மீண்டும்  9.1% ஆக  உயர்ந்துள்ளது - சிஎம்ஐஇ தகவல்

இந்தியாவின் வேலையின்மை விகிதம் மீண்டும் 9.1% ஆக உயர்ந்துள்ளது - சிஎம்ஐஇ தகவல்

இந்தியாவின் வேலையின்மை விகிதம் மீண்டும் 9.1% ஆக உயர்ந்துள்ளது - சிஎம்ஐஇ தகவல்
Published on

இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.1% ஆக உயர்ந்துள்ளது. அதைப்போலவே கிராமப்புற வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.37% ஆகவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.86% ஆகவும் உயர்ந்து வருகிறது என்று சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.

இந்திய பொருளாதார கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) வெளியிட்டுள்ள தகவல்களின்படி “ கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூலை 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.34 சதவீதமாக சரிந்தது, ஆனால் அது மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 17.92 சதவீதமாக இருந்தது, மேலும்  ஜூலை 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.10% ஆகவும், அடுத்த வாரத்தில் 7.66% ஆகவும் மாறியது. ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 6.47% ஆக குறைந்தது. தற்போது கிராமப்புற வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.86% ஆக மீண்டும் உயர்ந்து வருகிறது.

நகர்ப்புற இந்தியாவில், வேலையின்மை விகிதம் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 25.14 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.73 சதவீதமாகக் குறைந்து வருகிறது; ஆனால் அதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்  9.31% ஆகவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.61% ஆகவும் அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 23.5% ஆக இருந்த இந்தியா வேலையின்மை விகிதம் முதலில் ஜூன் முதல் வாரத்தில் 17.51% ஆகக் குறைந்தது, பின்னர் அது இரண்டாவது வாரத்தில் 11.6% ஆக சரிந்தது. இது ஜூலை மாதத்தில் 7.4% ஆக குறைந்தது, இது 2019-20 முழுவதும் சராசரி வேலையின்மை விகிதமான 7.6% ஐ விடக் குறைவாகும். ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது 7.19% ஆக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இது மீண்டும் 8.67 சதவீதமாகவும், ஆகஸ்ட் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com