ஜியோவின் அடுத்த அதிரடி: ட்ர்பிள் கேஷ்பேக் ஆஃபர்
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த நற்செய்தியை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தீபாவளி அறிவிப்பாக ’தண் தணா தண்’ சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த கேஷ்பேக் ஆஃபர் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜியோ தற்போது அடுத்த அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. இதன்படி, ரூ.399 மற்றும் அதற்கு மேல் ரிசார்ஜ் செய்பவர்களுக்கு ட்ரிபிள் கேஷ்பேக் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த ஆஃபரில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கேஷ் பேக் வழங்கப்படும் தொகையில் ரூ.400 ரிசார்ஜ் வவுச்சர்களாக நவம்பர் 15 தேதி முதல் மை ஜியோவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் ரூ.300 மொபைல் போன்களில் ரொக்க பரிமாற்றமாகவும் வழங்கப்படும் என்று ஜியோ கூறியுள்ளது. அது மட்டுமல்லாமல் ரூ.1,899 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈ காமர்ஸ் மூலம் ஷாப்பிங் செய்து கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மொத்தம் ரூ 2,599 வரை வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் ஆஃபராக திரும்ப தரப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த சலுலை ஜியோவின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் ஆரம்பமாகி நவம்பர் 25 தேதி வரை மட்டுமே.