ஜியோவின் அடுத்த அதிரடி:  ரூ.399க்கு  நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்..  ஹாட் ஸ்டார்.!

ஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.!

ஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.!
Published on

ஜியோ செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் பல இலவச சலுகைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இதுவரை யாரும் அறிவிக்காக இலவசங்களை அளித்துள்ளது.

குறைவான மாதக் கட்டணம், சர்வதேச ரோமிங் வசதிகள், எல்லையற்ற பொழுதுபோக்கு என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாதந்தோறும் ரூ. 399 செலுத்துவதன் மூலம் இலவசமாக நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய கூடுதல் வசதிகளைப் பெறலாம். மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக விமானத்தில் செல்லும்போதும் ஜியோ செல்போனைப் பயன்படுத்தலாம்.

தற்போது ஐந்துவிதமான டேரிப் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அன்லிமிடெட் வீடியோ கால்கள், குறுஞ்செய்திகளுடன் ரூ. 399 செலுத்தினால் போதும். 200 ஜிபி வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன் ஜியோசான், ஜியோ சினிமா, ஜியோ டிவி வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த பிளான் ரூ. 599. அன்லிமிடெட் கால்கள், குறுஞ்செய்திகள் வசதிகள் உண்டு. அத்துடன் ஜியோ போஸ்ட்பெய்டு பேமிலி பிளான்படி கூடுதலாக ஒரு சிம் கார்டு கிடைக்கும். அடுத்த மூன்று பிளான்கள் முறையே ரூ. 799, ரூ. 999, ரூ. 1,499 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ. 999, ரூ. 1499 திட்டங்களில் 500 ஜிபி வரை பெறலாம்.

ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் பிளானை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் செல்லும்பேது வைஃபை காலிங் வசதியைப் பெறமுடியும். ஜியோபோஸ்ட்பெய்டு வசதியைப் பெற்றிருப்பவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com