\
ரூ.299-ல் 30 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் ஏர்டெல்

ரூ.299-ல் 30 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் ஏர்டெல்

ரூ.299-ல் 30 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் ஏர்டெல்
Published on

ஜியோவுடன் போட்டிப்போடும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஏர்டெல் நிறுவனம் ரூ.299க்கு 30ஜிபி டேட்டாவை இலவசமாக அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.299க்கு மாதம்தோறும் 10ஜிபி வீதம் மூன்று மாதங்களுக்கு 30ஜிபி டேட்டா இலவசமாக அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவேளை 10ஜிபி டேட்டா ஒரு மாதத்தில் உபயோகப்படுத்தப்படவில்லை எனில் அதில் மீதமுள்ள டேட்டா அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் ரூ.499 முதல் ரூ.1199 வரை அளவில்லா இலவச அழைப்புகளுடன், மாதம் 10 ஜிபி வீதம் ஆறு மாதங்களுக்கு 60ஜிபி டேட்டா மற்றும் இலவச லைவ் டிவி சலுகை கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. மேற்கண்ட சலுகைகள் அனைத்தும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com