சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதியில் சவரன் தங்கத்தின் விலை 33,728 ரூபாயாக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் சவரன் தங்கம் 33,544 ரூபாய்க்கும் 33,632 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை 33, 656 ஆம் ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் நேற்று முன் தினம் 34,000 ரூபாய்க்கும், நேற்று 33,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 33,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் நேற்று 4180 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 36,968 ரூபாய்க்கும் 4,621 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் 71,400 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 71 ரூபாய்க்கும் 40 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.