6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

6 மாதங்களி‌‌ல் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு
Published on

நாட்டின் மொத்த‌விலை‌ பணவீக்க விகிதம் 6 மாதங்களி‌ல் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 3 புள்ளி ஐந்து ஒன்பது சதவிகிதமாக இருந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

வெங்காயம், முட்டை,‌ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்ததே பணவீக்க உயர்வுக்கு காரணம் என அரசு விளக்‌கம் அளித்துள்ளது. முன்னதாக நுக‌ர்வோர் நிலை பணவீக்கமும் 7 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருந்ததாக ‌அரசு தெரிவித்திருந்தது. தற்போது பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது பணவீக்கம் சற்றே குறைய வழிவகுக்கும் என ஆய்வு‌ ஒன்று தெரிவிக்கிறது. இதற்கிடையில் கடந்‌த அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி 1.12 சதவிகிதம் குறைந்து வர்த்தக பற்றாக்குறை பெருகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ள‌து.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com