இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்
Published on

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் கணிசமான சரிவுடன் வர்த்தகமாகின்றன.

காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்து 57,382 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 162 புள்ளிகள் இறங்கி 17,113 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து காணப்படுகின்றன. மற்ற ஆசியப் பங்குச்சந்தைகளில் காணப்படும் இறக்கத்தின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com