\
இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்
Published on: 

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன.

மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது. காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து 58, 861 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 17,555 புள்ளிகளில் வணிகமாகியது.

இன்றைய வர்த்தகத்தில் இண்டஸ் இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், ஐடிசி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. மத்திய அமைச்சரவை நேற்று தொலைத்தொடர்புத்துறை மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்க சலுகைகளை அறிவித்துள்ளதே பங்குச் சந்தைகள் உயரக் காரணமாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com