\
வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் !

வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் !

வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் !
Published on: 

சர்வதேச அளவில் வைர விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் மும்பையில் மெர்சிடஸ் பென்ஸ் கார் முழுவதும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை உருவாக்கி தருவதற்கான மூன்று நாள் வைர கண்காட்சி மும்பையில் நடைபெற்றது. வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த கண்காட்சியின்போது, மெர்சிடஸ் பென்ஸ் காரில் 3 லட்சத்து 50 ஆயிரம் வைரங்கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரளான வணிகர்கள் கலந்து கொண்டனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com