வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 52,776 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 97 புள்ளிகள் இறங்கி 15,825 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.
சர்வதேச சந்தையில் மற்ற ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்து வர்த்தகமாவதே இந்திய சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.