இந்தியாவின் மொத்த பொதுக்கடன் ரூ.61.13 லட்சம் கோடியிலிருந்து 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டிற்கான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த பொதுக்கடன் 3.6 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் உள்நாட்டின் கடன் 93 சதவிகிதம் என்றும், நிதிச்சந்தையின் கடன் 83.2 சதவிகிதம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே மத்திய அமைச்சகங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கியுள்ளதால், அதற்காக அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பெறும் முதல் காலாண்டின் கடன் தொகை 60 ஆயிரம் கோடி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஓதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.