Reserve Bank of India
x pageFile Image
வணிகம்
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் வீழ்ச்சி!
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 8.47 பில்லியன் டாலர் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 8.47 பில்லியன் டாலர் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Reserve Bank of Indiax page
டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 644.391 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவே முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 652.869 பில்லியன் டாலர்களாக இருந்தது.
அமெரிக்க டாலர் ஏற்றத்துடன் காணப்படும் நிலையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பு சில வாரங்களாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது. அதேபோல, தங்கம் கையிருப்பின் மதிப்பும் 2.33 பில்லியன் டாலர்கள் குறைந்து 65.72 பில்லியன்டாலர்களாக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.