கொரோனா தாக்கம் எதிரொலி: தங்கத்தின் தேவை கடந்த ஆண்டை விட 35 சதவீதம் சரிவு

கொரோனா தாக்கம் எதிரொலி: தங்கத்தின் தேவை கடந்த ஆண்டை விட 35 சதவீதம் சரிவு
கொரோனா தாக்கம் எதிரொலி: தங்கத்தின் தேவை கடந்த ஆண்டை விட  35 சதவீதம் சரிவு

இந்தியாவில் தங்கத்திற்கான தேவை கடந்த 2020ஆம் ஆண்டில் 35 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் மற்றும் கடந்த 2020ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சம் கண்டது போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் தேவை 35 புள்ளி 34 சதவிகிதம் சரிந்து 446 புள்ளி 4 டன்களாக வீழ்ச்சி கண்டது. மதிப்பின் அடிப்படையில் தங்கத்திற்கான தேவை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 280 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே முந்தைய 2019ஆம் ஆண்டில் தங்கத்தின் தேவை 690 புள்ளி 4 டன்களாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 770 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல, ஆபரணத் தங்கத்தின் தேவை 42 சதவிகிதம் சரிந்து 544 புள்ளி 6 டன்னிலிருந்து 315 புள்ளி 9 டன்னாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 790 கோடி ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 260 கோடி ரூபாயாக சரிவு கண்டுள்ளது.

இந்தியாவின் நிகர தங்கம் இறக்குமதியும் கடந்த 2020ஆம் ஆண்டில் 646 புள்ளி 8 டன்னிலிருந்து 47 சதவிகிதம் சரிந்து 344 புள்ளி 2 டன்னாக குறைந்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலால் கடுமையாக பாதிப்புக்குள்ளானதால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைக் கண்டுள்ளது. பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வருவது மற்றும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதால் தொழில்துறையின் செயல்பாடுகள் வலுபெற்று வருவது ஆகிய காரணங்களால் 2021ஆம் ஆண்டில் தங்கத்திற்கான தேவை வழக்கமான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com