‘ஹார்லி டேவிட்சன்’ பைக்குகள் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம்?

‘ஹார்லி டேவிட்சன்’ பைக்குகள் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம்?
‘ஹார்லி டேவிட்சன்’ பைக்குகள் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம்?

இந்தியா‌-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் உறுதி செய்யப்ப‌ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளி‌யாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் இந்தியாவுக்கு வழங்கிவந்த 'முன்னுரிமை வர்த்தக நாடு' என்ற அந்தஸ்தை ரத்து செய்தார். இதன்மூலம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரிச்சலுகை ரத்தானது. 

இந்நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அதிக அளவிலான பொருட்களை வர்த்தகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் மீதான வரியை குறைக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. 

இதேபோல், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் ஹார்ட் ஸ்டெண்ட், கால் மூட்டு மாற்று உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கான வரிவிதிப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு மீண்டும் அளிக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான அடுத்த சந்திப்பின்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com