\
வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு - பூண்டு விலை சரிவு

வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு - பூண்டு விலை சரிவு

வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு - பூண்டு விலை சரிவு
Published on: 

வடமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியதால், அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய பூண்டு, இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனால், வடமாநிலங்களில் உள்ள குடோன்களில் ஆயிரக்கணக்கான டன் பூண்டு தேக்கமடைந்தது. இதனால், சேலத்தில் ஒரு கிலோ பூண்டு 70 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது தொடர் மழை குறைந்துள்ளதால் சேலம் மாவட்டம் ஓமலூருக்கு 30 முதல் 80 டன் பூண்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com