வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு

வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு

வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தை மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்தது. ஆனால், அந்த இணையதளம் சில நாட்களில் முடங்கிய நிலையில், அதை நிர்வகிக்கும் இன்போசிஸ் நிறுவன தொழில்நுட்ப அதிகாரிகள் சரி செய்தனர். எனினும், இணையதளத்தில் வருமானக் கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்யும்போது சிரமத்தை சந்திப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இப்போது வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை பரிசீலித்து காலக்கெடுவை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com