வணிகம்
வங்கிகளிடம் டெபாசிட் விவரங்களை கேட்கிறது வருமான வரித்துறை
வங்கிகளிடம் டெபாசிட் விவரங்களை கேட்கிறது வருமான வரித்துறை
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்ட விவரங்களை அளிக்குமாறு வங்கிளை வருமான வரித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதிக்கு முன்னதாக, பெரிய அளவில் ரொக்கமாக செய்யப்பட்ட டெபாசிட்களை அறிய வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக பெரிய தொகையை டெபாசிட் செய்தவர்கள் விவரத்தையும் சேகரிக்க முடிவெடுத்துள்ளது. எனவே இதற்கான விவரங்களை அளிக்குமாறு வங்கிகளை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

