வணிகம்
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கப்பரிசு
RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ஊக்கப்பரிசு
இந்திய பன்னாட்டு நிதிச் சேவைகள் மற்றும் கட்டணச் சேவை அமைப்பான ‘RuPay’ கார்டு மற்றும் இந்திய மொபைல் பேமெண்ட் அப்ளிகேஷனான BHIM UPI மூலமாக சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்வதற்கு ஊக்கப்பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.