வணிகம்
சென்னையில் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை
சென்னையில் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, 37,808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் தொடர்ந்து ஏறு முகத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து காணப்பட்டது. அதன் படி, நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கமானது 37,744 ரூபாய்க்கும், நேற்று 37,696 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையானது 112 ரூபாய் அதிகரித்து 37,808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கமானது நேற்று 4,712 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,726 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது சவரனுக்கு 40,880 ரூபாயாகவும், கிராமுக்கு 5,110 ரூபாயாகவும் உள்ளது.
ஒரு கிராம் வெள்ளியானது, 72.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியானது 72,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.