குறையும் கச்சா எண்ணெய் விலை - குறையாத பெட்ரோல், டீசல் விலை

குறையும் கச்சா எண்ணெய் விலை - குறையாத பெட்ரோல், டீசல் விலை
குறையும் கச்சா எண்ணெய் விலை - குறையாத பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயையும், டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாயையும் நெருங்குகிறது.

இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 38 காசுகள் உயர்ந்து 109 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து 99 ரூபாய் 42 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 103 டாலரில் வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் நிலையில், கடந்த 15 நாட்களில் பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் 13 டாலர் குறைந்துள்ளது. ஆனால், 14 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 7 ரூபாய் 94 காசுகளும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாய் 99 காசுகளும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிக்க: 'பெட்ரோல் 110.65, டீசல் 100.70'.. தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக விலை நிலவரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com