கொரோனா எதிரொலி : ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவித்த குடும்பங்கள்-ஆய்வில் தகவல்

கொரோனா எதிரொலி : ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவித்த குடும்பங்கள்-ஆய்வில் தகவல்

கொரோனா எதிரொலி : ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவித்த குடும்பங்கள்-ஆய்வில் தகவல்
Published on

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் என்.சி.ஏ.இ.ஆர் எனப்படும் தேசிய செயல்முறை பொருளாதார ஆய்வுக்கான கவுன்சில் அண்மையில் கொரோனாவின் தாக்கம் உத்தரபிரதேசம்  மற்றும் ஒடிசா மக்களின் வருமானத்தில் எப்படி எதிரொலித்துள்ளது என்பது குறித்த சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளது.

தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் சுமார் 25 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானமின்றி இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. பெரும்பாலான மக்கள் ஊரடங்கிற்கு முன்னர் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு மாற்று வேலைக்கு சென்று வருவதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. 

குறிப்பாக சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயத்தில் விவசாய தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com