வணிகம்
இந்தியாவில் இந்த ஆண்டு 11.5% பொருளாதார வளர்ச்சி: சர்வதேச நிதியம் கணிப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு 11.5% பொருளாதார வளர்ச்சி: சர்வதேச நிதியம் கணிப்பு
இந்தியா இந்த ஆண்டு 11.5% பொருளாதார வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு பிறகான இந்த ஆண்டில் உலக நாடுகள் அடையும் பொருளாதார வளர்ச்சி சதவிகித பட்டியலை சர்வதேச ஆணையம் கணித்துள்ளது. அதில் இந்தியா இந்த ஆண்டு 11.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா 8.1 சதவிகிதமும், ஸ்பெயின் 5.9 சதவிகிதமும், பிரான்ஸ் 5.5 சதவிகிதமும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகளின் மூலம் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற சிறப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சர்வதேச ஆணையம் வெளியிட்ட பட்டியலில் இந்திய நாடு மட்டுமே பொருளாதார வளர்ச்சி சதவீதம் இரட்டை இலக்க சதவீதத்தை பெற்றுள்ளது.