வணிகம்
வருடாந்திர விடுமுறையில் சாந்தா கோச்சார் உள்ளார்: ஐசிஐசிஐ விளக்கம்
வருடாந்திர விடுமுறையில் சாந்தா கோச்சார் உள்ளார்: ஐசிஐசிஐ விளக்கம்
ஏற்கெனவே திட்டமிட்டப்படி சாந்தா கோச்சார் வருடாந்திர விடுப்பில் இருப்பதாக ஐசிஐசிஐ வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சாந்தா கோச்சார். இவரை ஐசிஐசிஐ வங்கி வேலையை விட்டுவிட்டு செல்லுமாறு நிர்பந்தித்தாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து ஐசிஐசிஐ வங்கி தேசிய பங்குச் சந்தைக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில் “ ஏற்கெனவே திட்டமிட்டபடிதான் சாந்தா கோச்சார் வருடாந்திர விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை விடுப்பில் செல்ல நிர்பந்திக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது”. மேலும் சாந்தா கோச்சார் இடத்தை நிரப்புவதற்காக அடுத்த தலைமைச் செயல் அதிகாரியை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் ஐசிஐசிஐ வங்கி மறுத்துள்ளது.