பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது எப்படி? மத்திய,மாநில அரசுகளின் வரிகள் எவ்வளவு?

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது எப்படி? மத்திய,மாநில அரசுகளின் வரிகள் எவ்வளவு?
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது எப்படி? மத்திய,மாநில அரசுகளின் வரிகள் எவ்வளவு?

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 110-ஐ நெருங்கியிருக்கிறது. டீசல் விலை தற்போது 100 ரூபாயை தொட்டிருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு பெட்ரோல் எப்படி வருகிறது? என்பன உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

கச்சா எண்ணெய்

பெட்ரோல், டீசல் ஆகியவை எல்லாம் கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுபவை. ஆனால் இத்தகைய கச்சா எண்ணெய் வளம், நம் நாட்டில் பெரிதளவில் இருக்கிறதா என்றால் நிச்சயம் இலை. இதற்காக நம் வெளிநாடுகளைதான் சார்ந்திருக்கிறோம். இந்தியாவிற்கு தேவையான 80 சதவீத கச்சா எண்ணெய் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், நைஜீரியா, அமெரிக்கா, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

வாங்கும் விதம்

பாலை எப்படி லிட்டர் கணக்கில் நாம் வாங்குகிறோமோ, அதேபோல கச்சா எண்ணெயை பேரல் கணக்கில் வாங்குகிறோம். பிரெண்ட் கச்சா எண்ணெய் 1 பேரல் இன்று 107.9 அமெரிக்க டாலருக்கு கிடைக்கிறது. அதனை இந்திய மதிப்பில் கணக்கில் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 1 பேரல் கச்சா எண்ணெய் விலை 8,185 ரூபாய்க்கு கிடைக்கிறது.

1 பேரல் கச்சா எண்ணெய் என்பது மொத்தம் 159 லிட்டரை கொண்டிருக்கிறது. இந்த 159 லிட்டரும் பெட்ரோலாக மாறுமா என்றால் மாறாது. இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் ஆனது இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அதனை சுத்திகரிப்பு செய்ய பாரத் பெட்ரோலியம், இந்திய ஆயிள் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கேதான் கச்சா எண்ணெய் ஆனது சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

சுத்திகரிப்பின்போது பெட்ரோல், டீசல், ஜெட் எரிவாயு உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. ஒரு பேரல் கச்சா எண்ணெயில் இருந்து கிட்டத்தட்ட 73 லிட்டர் பெட்ரோல், 36 லிட்டர் டீசல், 20 லிட்டர் ஜெட் எரிபொருள் மற்றும் இதுதவிர மற்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மை விலை

1 பேரல் (159 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை 8,185. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்பது 51 ரூபாய் 47 பைசா. கச்சா எண்ணெயை பெட்ரோலாக மாற்ற 1 லிட்டருக்கு கிட்டத்தட்ட 2 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மை விலை என்பது 54 ரூபாய் வரை இருக்கும். டீசலாக மாற்ற 2 ரூபாயில் இருந்து 4 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. அப்படி பார்க்கும்போது டீசலின் அடிப்பைட விலை 56 ரூபாய்.

மத்திய, மாநில அரசுகளின் வரிகளுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோல் ஆனது 53 ரூபாயிலிருந்து 54 வரை இருக்கிறது. இதன்பின் மத்திய அரசின் கலால் வரி செஸ் வரி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படுகிறது. இந்த வரியானது பெட்ரோலின் அடிப்படை விலையில் இருந்து கிட்டத்தட்ட 52 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விதிக்கப்படும் மத்திய அரசின் வரி 28 ரூபாய்.

இதன்பின் மாநில அரசின் வாட் வரி, நிர்ணய விலை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து பார்த்தால், பெட்ரோலின் அடிப்படை விலையில் இருந்து கிட்டத்தட்ட 41 சதவீதம் வரை இருக்கிறது. மாநில அரசின் வரி விதிப்பு ரூபாய் 22.14. இப்போது மொத்தமாக பார்த்தேமேயானால்

அடிப்படை விலை- 54
மத்திய அரசின் வரி- 28
மாநில அரசின் வரி- 23
டீலர் கமிஷன்- 5 ரூபாய்
ஆக மொத்தம் பெட்ரோல் 1 லிட்டர் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதனை டீசலுக்கு எடுத்துக்கொண்டால்,

டீசல் அடிப்படை விலை- 56 ரூபாய்
மத்திய அரசின் வரி- 39 சதவீதம் வரை வருகிறது - 22
மாநில அரசின் வரி- 33 சதவீதம் வரை வருகிறது- 19 ரூபாய்
விநியோகஸ்தர்கள்- 3 ரூபாய்
டீசல் விலை- 100

இது அனைத்தும் தோராயமாக கணக்கிடப்பட்டதுதான். இதில் கிட்டத்தட்ட ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com