யெஸ் வங்கியில் பணம் எவ்வளவு எடுக்க முடியும் ?

யெஸ் வங்கியில் பணம் எவ்வளவு எடுக்க முடியும் ?

யெஸ் வங்கியில் பணம் எவ்வளவு எடுக்க முடியும் ?
Published on

யெஸ் வங்கியில் மருத்துவ செலவுகள், உயர்கல்வி மற்றும் திருமண செலவுகள் உள்ளிட்ட அவசர தேவைக்கு ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்.

யெஸ் வங்கியில் வாரக்கடன் பிரச்னையால் அதனை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் பரவின. பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஏடிஎம்களில் எடுத்துக்கொள்ளலாம் என யெஸ் வங்கி ட்விட்டரில் அறிவித்தது.

ஆனாலும், ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் ரூ.50,000 மட்டுமே ஒரு நபர் எடுக்க முடியும் என தகவல் பரவியது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால் மருத்துவ செலவுகள், உயர்கல்விக் கட்டணங்கள் மற்றும் திருமண செலவுகள் உள்ளிட்டவற்றிற்கு ரூ.5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம்.

எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், அவர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com