ஜிஎஸ்டிக்குபின் ஏசி உணவகங்களில் குறையும் வாடிக்கையாளர் கூட்டம்

ஜிஎஸ்டிக்குபின் ஏசி உணவகங்களில் குறையும் வாடிக்கையாளர் கூட்டம்

ஜிஎஸ்டிக்குபின் ஏசி உணவகங்களில் குறையும் வாடிக்கையாளர் கூட்டம்
Published on

ஜிஎஸ்டி அமலுக்குப் பின் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உணவகங்களில் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் நகைக்கடை, துணிக்கடை போன்றவற்றிற்கு உள்ளது போல் ஒரே ‌வரி விதிக்கக்கோரும் உணவக உரிமையாளர்கள், மூலப்பொருட்கள் தொடர்பான குழப்பங்களையும் தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‌ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஒரு மாத காலம் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ‌உணவக உரிமையா‌ளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள உணவகங்களுக்கு என தனி வரி விதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, மறு புறம் இனிப்பு வகைகளை விற்கும் கடைகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனிப்பு, திண்பண்டங்கள், சாக்லெட்டுகள், பாதாம்பருப்பு என தனித்தனி வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றைக் கலவையாக பயன்படுத்தும் உணவுகளுக்கு என்ன வரி விதிப்பது என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இனிப்புக் கடைகளில் சாதாரண பர்ஃபிகளுக்கு 5 ‌சதவீத ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது. சாக்லேட்டுகளுக்கு 28 சதவீத வரி அப்போது சாக்லெட் கலந்து செய்யப்படும் பர்ஃபிகளை இனிப்பு வகையில் சேர்ப்பதா, அல்லது சாக்லெட்களுக்கான வரி‌யை எடுத்துகொள்வதா என்ற குழப்பம் ஏற்ப‌டுகிறது. பாசந்தி, ரசமலாய் உள்ளிட்டவற்றை இனிப்புகளாக எடுத்துக்கொண்டால் 5 சதவீத வரி, குளிர்பானங்களாக எடுத்துக்கொண்டால் 12 சதவீத வரி. வருத்த பாதாம், முந்திரிகளுக்கு 18 சதவீத வரி, அதுவே அவற்றுடன் மிக்ஸர் கலந்து திண்பண்டமாக்கினால் 12 சதவீத வரி வரும். இதே போல் பழங்கள், பாதாம், முந்திரி பருப்புகள் உள்ளிட்டவற்றை சேர்த்து செய்யப்படும் FALOODAக்களுக்கான வரி விதிப்பிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com