ஹானர் ‘ப்ளே 4’, ‘ப்ளே 4 ப்ரோ’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்..!

ஹானர் ‘ப்ளே 4’, ‘ப்ளே 4 ப்ரோ’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்..!
ஹானர் ‘ப்ளே 4’, ‘ப்ளே 4 ப்ரோ’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்..!

5ஜி நெட்வொர்க்குடன் ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஹானர் ‘ப்ளே 4’, ‘ப்ளே 4 ப்ரோ’ ஆகிய இரண்டு போன்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ‘ப்ளே 4’ மாடல் போனானது, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரண்டு ரகங்களில் வெளிவந்துள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகத்தின் விலை ரூ.19,100 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகத்தின் விலை ரூ.21,200 எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ‘ப்ளே 4 ப்ரோ’ மாடல் 8 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.30,800 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் நீலம், கறுப்பு மற்றும் ஐஸ்லேண்ட் நிறங்களில் கிடைக்கும்.

ஹானர் ப்ளே 4 மாடலை பொறுத்தவரையில் ஆன்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும். 6.81 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 64 எம்பி மெயின் கேமரா, 8 ஜிபி துணைக் கேமரா அத்துடன் 2 எம்பி கொண்ட இரண்டு லென்சுகள் உள்ளன. இதுதவிர 16 எம்பி செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 4,300 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

ஹானர் ‘ப்ளே 4 ப்ரோ’ மாடலை பொறுத்தவரையில் ஆன்ராய்டு 10 இயங்கு தளத்தில் செயல்படும். இதில் 6.57 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. 40 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி துணைக் கேமரா மற்றும் லென்சுகள் உள்ளன. அத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா, அதற்கு 8 எம்பி துணை கேமரா உள்ளது. இதில் 4200 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இந்த இரண்டு மாடலிலும் 5 ஜி நெட்வொர்க் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com