ஏப்ரல் 15ல் வெளியாகும் ‘ஹானர் 30’ ? - சிறப்பம்சங்கள்..?

ஏப்ரல் 15ல் வெளியாகும் ‘ஹானர் 30’ ? - சிறப்பம்சங்கள்..?
ஏப்ரல் 15ல் வெளியாகும் ‘ஹானர் 30’ ? - சிறப்பம்சங்கள்..?

ஹானர் 30 மற்றும் ஹானர் 30 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 15ல் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் விற்பனைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு தொடரலாம் எனத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன நிறுவனமான ஹவாய் தனது ஹானர் தயாரிப்பு ஸ்மார்ட்போன்களில் புதிய மாடல்களான ஹானர் 30 மற்றும் ஹானர் 30 ப்ரோ ஆகியவற்றை ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செல்போன்களின் சிறப்பம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத போதிலும், அதுதொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

அதன்படி, ‘ஹானர் 30 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு ரகங்களில் இண்டெர்நல் ஸ்டோரேஜ் இருக்கும் எனவும், 40 எம்பி (மெகா பிக்ஸல்) பின்புற கேமரா இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 32 எம்பி செல்ஃபி கேமராவும், 3,900 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹானர் 30 மாடலை பொறுத்தவரையில் 50 எம்பி பின்புற கேமரா வழங்கப்படலாம் எனவும் மற்றபடி, இரண்டு மாடல்களும் ஒரே மாதிரி சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com