12 மாதங்கள் வரை தவணை... சுற்றுலாவுக்கு கடன் வாங்குவது சரியா?

12 மாதங்கள் வரை தவணை... சுற்றுலாவுக்கு கடன் வாங்குவது சரியா?
12 மாதங்கள் வரை தவணை... சுற்றுலாவுக்கு கடன் வாங்குவது சரியா?

கொரோனா லாக்டவுனால் மிகவும் பாதிக்கப்பட்ட துறையில் சுற்றலாவும் ஒன்று. விதிமுறைகளில் தர்ளவு வந்தால் பலரும் சுற்றுலா செல்லத் தயாராக இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக்கொள்ள சுற்றுலா ஆப்பரேட்டிங் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அதன்படி, தாமஸ் கும் மற்றும் எஸ்.ஓ.டி.சி. ஆகிய நிறுவனங்கள் Holiday first pay when you return என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. சுற்றுலா முடித்த பிறகு கடனை செலுத்திக்கொள்ளலாம். இதற்காக வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் இரு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன.

ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சுற்றுலா முடிந்த அடுத்த மாதம் முதல் கடன் செலுத்த வேண்டும். ஒருவேளை தவணை தேதிக்கு முன்பாக மொத்த தொகையையும் செலுத்திவிட்டால் வட்டி கட்ட தேவையில்லை. மூன்று, ஆறு, 9 மற்றும் 12 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்தலாம். ஒவ்வொருவரின் சிபில் நிலவரத்துக்கு ஏற்ப கடன் வழங்கப்படும்.

சரி, சுற்றுலாவுக்கு கடன் வாங்கலாமா?

நிதி ஆலோசகர்களிடன் கேட்டால், "அவர்களின் பதில் வேறாக இருக்கும். கல்விக்கடன் மற்றும் வீட்டுக்கடன் மட்டுமே அவசியமாக கடன். காரணம், இவை இரண்டும் உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். கல்விக்காக கடன் வாங்கும்போது நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வீடு என்பது அவசியமானது. தவிர, வீட்டுக்கடன் வாங்கும்போது வாடகை செலவு குறைகிறது, மேலும் வீட்டுக்கடனுக்கு சலுகைகள் உள்ளன. ஆனால், இதுபோல செலவுகளுக்காக கடன் வாங்குவது அனாவசியம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவேளை நீங்கள் சென்றாக வேண்டும் என முடிவெடுத்தால் சந்தையில் பல கடன் திட்டங்கள் உள்ளன. ஒரு கடனை வாங்குவதற்கு முன்பு எவ்வளவு வட்டி, கூடுதலாக எவ்வளவு தொகையை செலுத்துகிறோம், வேறு கடன்கள் மூலம் குறைந்த வட்டி கிடைக்குமா என்பதை ஆராய்ந்த பிறகு கடன் வாங்கலாம்" என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com