லண்டனில் அமைகிறது ஹீரோ இ-பைக்கின் சர்வதேச தலைமையகம்
ஹீரோ இ-பைக்ஸ் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் லண்டனில் உலகளாவிய தலைமையகத்தை நிறுவ உள்ளோம் என அந்நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சல் தெரிவித்துள்ளார். அதன் மூலம் ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் வருவாயை ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஈட்டவும் இலக்கு வைதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதிதாக அமையவுள்ள இந்த தலைமையகத்தை ஹீரோ இன்டர்நேஷ்னல் என சொல்கிறது அந்நிறுவனம்.
இதன் மூலம் ஐரோப்பாவின் இ-பைக் சந்தையில் கணிசமான இடத்தை பிடிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2030 வாக்கில் தோராயமாக 30 மில்லியன் இ-பைக் விற்பனையை ஐரோப்பா எட்டும் என்பதால் இதை செய்துள்ளதாகவும் பங்கஜ் முஞ்சல் தெரிவித்துள்ளார்.
விரைவில் பஞ்சாப் மாநிலத்தில் அமைய உள்ள இ-சைக்கிள் வேலி திட்டத்தின் மூலமாக ஐரோப்பாவுக்கு தேவைப்படும் பைக்குகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது. அதோடு பூஜ்ஜிய ஏற்றுமதி வரியின் உதவியின் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு அதனை ஏற்றுமதியும் ஹீரோ நிறுவனம் செய்ய உள்ளது.