இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி-டேவிட்சன்?

இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி-டேவிட்சன்?
இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி-டேவிட்சன்?

பிரபல அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்திய மோட்டார் சந்தையில் இருந்து வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஹார்லி டேவிட்சன். இந்நிறுவனமானது பல நாடுகளில் தங்களது மோட்டார் சைக்கிள் விற்பதற்கான டீலர்களை வைத்துள்ளது. இந்நிலையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் நிறுவனம் சில நிறுவனங்களிடம் தங்களது நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் வெளியான காலாண்டு முடிவு அறிக்கையின் படி ஹார்லி டேவிட்சன் கூறும் போது “ ஹார்லி டேவிட்சன் உலகச் சந்தைகளில் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏனெனில் நிறுவனத்தின் உற்பத்தியும், வருமானமும், தொடர் முதலீட்டு திட்டத்திற்குச் சாதகமாக இல்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த ஆண்டில் ஹார்லி டேவிட்சன் 2500க்கும் குறைவான வாகனங்களை விற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஏப்ரல் ஜுன் மாதங்களில் வெறும் 100 வாகனங்களையே விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிறுவனம் சார்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஊகங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படும் வகையில் 250 -500 cc ரக வாகனங்களை வெளியிட்ட அந்நிறுவனம் 65,000 முதல் 70,000 வரை சலுகைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர் விற்பனை சரிவு காரணமாக தற்போது இந்தியாவிலிருந்து ஹார்லி டேவிட்சன் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com